புதிய தலைமுறையின் இரண்டு செய்திகளின் பின்னாலுள்ள மேல்தட்டு மனோபாவம்...

ரெ கா பால முருகன்

இமாலய ஊழல் என்றால் அது 175000 கோடி ஊழலான, இரண்டாம் அலைக்கற்றை ஊழல். இதில் யாருக்குப் பிரச்னை. ராசா, தி மு க மற்றும் சில அரசியல்வாதிகள், சில அரசு அதிகாரிகள். அதனை வரிந்து கட்டி எழுதிய பத்திரிக்கைகளில் புதிய தலை முறை மட்டும் மாற்றுக் குறைந்ததா என்ன? ஆனால் அதே சமயம் இஸ்ரோ, தேவாஸ் இடையிலான ஒப்பந்த ஊழலான 200000 லட்சம் கோடிக்கு அதன் தலையங்கம் எப்படியுள்ளது எனப் பாருங்கள். உங்களுக்குப் புரியும் அதன் எண்ணம் எப்படியென்று? அதாவது அரசாங்கம் சொன்னதாம் இஸ்ரோ தனது செலவினங்களுக்கான வருவாயை அதுவே தேடிக் கொள்ள வேண்டும் என்று அதனால்தான் இப்படியொரு ஊழல் நடந்து விட்டதாம். அதனால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமாம் தனது முடிவைப் பரிசீலிக்க வேண்டுமாம். இந்த மெத்தப் படித்த மேதாவிகள் கேள்வி கேட்பாரில்லாமல் தவறு செய்வார்களாம் ஆனால் அதனை அரசு தவிர்ப்பதற்கு வழிமுறை செய்ய வேண்டுமாம். 

எனக்குத் தெரியாதது 175000 கோடி இமாலய் ஊழல் என்றால் இந்த 200000 கோடி என்ன ஊழல்.. அதனை என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும்..அதனை விடுத்து இந்தத் தலையங்கம் பள பளத் தாளில் நழுவி ஓடி தன் அபிமானத்தைக் வோடோ போன் நாய்க் குட்டியாய் காண்பித்து விடுவதுதான் உண்மை. 

போன இதழில் இதே புதிய தலைமுறை இழந்தது பீர்மேடு , தேவிகுளம் மட்டும்தானா என்ற கட்டுரையில் மலையாளப் பணிக்கரின் தந்திரங்களை அலசி ஆராய்வதுடன், நேரு அவர்களின் ஆட்சியில் அதிகார அமைப்புகளில் நீக்கமற நிறைந்திருந்த மலையாள அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த சம்பவங்களை தமிழகத்தின் நலனுக்கெதிராக எப்படியெல்லாம் சதி செய்து இந்த வேலையைச் செய்தனர் என விவரிக்கின்றது. வரவேற்கத்தகுந்ததுதான். 

அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள போதுமான பிரதி நிதித்துவத்தினை அடையாத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுத் தொல்லைகள் இந்த மத்திய அரசின் அதிகாரப் பதவிகளில் நீக்கமற நிறைந்து கிடக்கும் பனியா,பஞ்சாபி, பிராமண மற்றும் மலையாள அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனையும், அதனை அடைய முடிந்த பிற்படுத்தப்பட்டவர்களை "கிரீமி" லேயர் என ஒதுக்கி வைப்பதனையும் எழுத மறுப்பது விந்தையிலும் விந்தை.. அல்லது அவர்களை எழுத விடாது தடுத்தாட்கொள்ளும் மால் யாரோ? உண்மையிலேயே இந்தியாவின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட வேண்டுமானால் அது இந்த அதிகபட்சமான பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தால்தான் முடியும்..இயலும்.. 

இந்த ஊடகத் தொல்லைகள் நம்மை இத்தகைய செய்திகளின் பிண்ணனியை ஆராய வைக்கின்றன. இது முழுக்க இந்த ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால்தான். உயர் சாதி மக்கள் இட்லி வடை என்று பிளாக் ஆரம்பித்துக் கூட தங்கள் கடையைப் பரப்பி எண்ணங்களை விதைத்து விடுகின்றனர். இதுவும் இல்லையென்றால் தயிர் சாதம், சாம்பார் சாதம், மோர்க் குழம்பு, அக்கார வடிசில் என்று கூட கூவிக் கூவி விற்றுக் கூட தங்கள் இனப் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்வார்கள். கூடவே சிறிது திருப்பதி லட்டு தந்தால் நாம் பக்தப் பிரகலாதர்களாய் நம்மைக் கற்பனை பண்ணிக் கொல்வதும் அவர்கள் நம்மை நந்தனாராக்கிப் பொன்னார் மேனியனாக்கி புண்ணியம் தேடிக் கொள்வது இன்றும் நடந்து கொண்டுதானே உள்ளது.