வியாழன், ஆகஸ்ட் 28, 2014

செய்திகள்
1)      தடை... தடை... தடை மேல் தடை..

-    கோயம்பேடுல கருவாடு விற்கத் தடை
-    ஊடகத்தில் கருத்து சொல்லத் தடை
-    மஹாவீர்ர் பிறந்த வாரத்தில் கறிக்கடைகளுக்குத் தடை

2)      தடையில்லாத் தொழில்கள்- புத்தர்....வள்ளலார்.. போன்றோர் பிறந்த நாளென்றாலும்

-    வட்டிக் கடைகள் ..
-    மதுபானக்கடைகள்....

   3) மறைகிறதா மோடி மேஜிக் – இடைத் தேர்தல் முடிவுகள்
-    மேஜிக்னா மறையும்தான..கொஞ்சம் லாஜிக்கா யோசிங்கப்பா?
-    மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் தலையாட்டற மீடியா அம்பிகள் செலெக்டிவ் அம்னீஷியாவில தப்பிச்சுருவாய்ங்க?

3)      வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை – தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி.

-    முதல்ல அவங்களோட எண்ணங்கள வாக்கு இயந்திரம் பிரதிபலிக்குதா இல்லையான்னு பாருங்க ஆபிசர்..
-    ஜன நாயகமே கேள்விக்குறியான பிறகு உங்க வண்ணத்தில என்ன இருக்கு?
-     
4)      கசப்பு மருந்தைத் தருவது தவிர வேறு வழியில்லை. அது பிற்கால நனமையைக் கருதித்தான் – நரேந்திர மோடி

-    அது... அது... அதேதான்.. மருந்த மக்களே தந்துட்டாய்ங்கள்ள..
-    இனியாவது இனிப்பு மருந்து தருவாய்ங்களா..

5)      கச்சத் தீவைக் காப்பாற்ற இலங்கையுடன் போரா தொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்

-    த.அ, பு.க, பு.பு, த.கு.தா எல்லோரும் கேட்டால் மோடி இலங்கை மேல போர் தொடுப்பார்னு சொன்னாங்கோ.
-    இவிய்ங்கல்லாம் இப்ப என்ன செய்றாங்க..
-    ஒரு கை கொறஞ்சா ம.த வையும் சேர்த்துக்கங்கப்பா.


-   
செய்திகள்
1)      தடை... தடை... தடை மேல் தடை..

-    கோயம்பேடுல கருவாடு விற்கத் தடை
-    ஊடகத்தில் கருத்து சொல்லத் தடை
-    மஹாவீர்ர் பிறந்த வாரத்தில் கறிக்கடைகளுக்குத் தடை

2)      தடையில்லாத் தொழில்கள்- புத்தர்....வள்ளலார்.. போன்றோர் பிறந்த நாளென்றாலும்

-    வட்டிக் கடைகள் ..
-    மதுபானக்கடைகள்....

   3) மறைகிறதா மோடி மேஜிக் – இடைத் தேர்தல் முடிவுகள்
-    மேஜிக்னா மறையும்தான..கொஞ்சம் லாஜிக்கா யோசிங்கப்பா?
-    மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் தலையாட்டற மீடியா அம்பிகள் செலெக்டிவ் அம்னீஷியாவில தப்பிச்சுருவாய்ங்க?

3)      வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை – தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி.

-    முதல்ல அவங்களோட எண்ணங்கள வாக்கு இயந்திரம் பிரதிபலிக்குதா இல்லையான்னு பாருங்க ஆபிசர்..
-    ஜன நாயகமே கேள்விக்குறியான பிறகு உங்க வண்ணத்தில என்ன இருக்கு?
-     
4)      கசப்பு மருந்தைத் தருவது தவிர வேறு வழியில்லை. அது பிற்கால நனமையைக் கருதித்தான் – நரேந்திர மோடி

-    அது... அது... அதேதான்.. மருந்த மக்களே தந்துட்டாய்ங்கள்ள..
-    இனியாவது இனிப்பு மருந்து தருவாய்ங்களா..

5)      கச்சத் தீவைக் காப்பாற்ற இலங்கையுடன் போரா தொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்

-    த.அ, பு.க, பு.பு, த.கு.தா எல்லோரும் கேட்டால் மோடி இலங்கை மேல போர் தொடுப்பார்னு சொன்னாங்கோ.
-    இவிய்ங்கல்லாம் இப்ப என்ன செய்றாங்க..
-    ஒரு கை கொறஞ்சா ம.த வையும் சேர்த்துக்கங்கப்பா.


-   

சனி, ஏப்ரல் 26, 2014

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!

காங்கிரசின் துணைத் தேர்தல் அறிக்கை வெற்றிக்கான கடைசி முயற்சி. – பா ஜ க  
 •  நம்ம தேர்தல் அறிக்கையை ஆடி ஓடி, பாதி தேர்தல் முடியறப்ப வெளில கொண்டு வரதுக்குள்ளயே உயிர் போயிடுச்சு,
 • -    இவிய்ங்க விட மாட்டாய்ங்க போல !
 • -    அப்பு அடுத்ததுக்கு ஒரு அய்ந்து வருசமாவது வேணும் அப்பு!

என்னைத் தடுக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் – மோடி
 • -    தேர்தல் முடியட்டும், ஜெயிச்சா பா ஜ கா வே அதைத்தான் செய்யும்.
 • -    பிரேக்கில்லாத வண்டியத் தடுக்காதீங்கப்பா? அதுவா நிக்கத்தான போகுது.

பா ஜ க வில் இணைந்தார் மன்மோகன் சிங்கின் சகோதரர்..
 • -   அண்ணன் அவமானப்படுத்தப்பட்டதற்காக என்ற தம்பி சரிதான்.
 • - ஆனால் பா ஜ க வில் சீட்டுக்கு துண்டு போடுவதென்னவோ பங்காளிச் சண்டை மாதிரி உள்ளதே!
 • - அண்ணன் தி மு க .. தம்பி அ தி மு க கதையெல்லாம் எங்களுக்கு ரொம்பவே பழசு.. அங்க இப்பதான் ஆரம்பம் போல.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்து பா ஜ க மௌனம் ஏன்? கபில் சிபல்
 • கள்ள மௌனம்தானே வைகோ-தமிழருவி-சின்ன அய்யா அவர்களே!
 • உங்களுக்கென்ன கூட்டணியில்லாம தனித்து விடப்பட்டதால் தொல்லை இல்ல.
 • எங்க அணியில தமிழருவி மணியன், ம தி மு க, பா ம க எல்லாம் இருக்காங்கள்ள.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது..சரத் குமார்
 • நமக்கு எதுக்குங்கண்ணே தீர்ப்பு அது இதெல்லாம்..
 • நமக்கு வேண்டியது ரெண்டு சீட்டு..
 • ஒண்ணு சித்தப்பாவுக்கு .. இன்னொன்னு பகுத்தறிவுச் சித்திக்கு...
 • ம்மாகிட்ட சொல்லி ரெண்டு சீட்டுக்குத் துண்டு போட்டா எல்லா ஏமாற்றமும் சட்டமன்றத் தேர்தலில் சரியாப் போகும்.

சுவர் விளம்பர பிரச்னை. வீட்டு உரிமையாளருக்கு அடி – மாமல்லபுரம்
 • நாடே எங்களுக்கு உரிமைன்னா வீட்டுச் சுவருக்கு எங்களுக்கு உரிமையில்லையா?
 • என்னடா நடக்குது இங்க !

2016 தேர்தலில் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது..- ஞானதேசிகன்.

 • என்னவொரு நம்பிக்கை..
 • அப்ப, கூட்டணிக் கதவ இப்பவே திறந்துட்டாய்ங்க.

அதானி குழுமத்தின் சொத்து உயர்ந்தது எப்படி? – ராகுல் காந்தி
 • யாரு வளர்ச்சிக்குப் பின்னால் யாரு?  
 • மோடியா...லேடியா...டாடியா?
 • சொல்வீர்களா...நீங்களெல்லாம் சொல்வீர்களா?

நீதித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதாது. - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
 • நிதித்துறையை நீதித்துறை அனுசரித்துப் போகவில்லையோ?புதன், பிப்ரவரி 26, 2014

சிதம்பரம் ..

தீர்ப்புகள் திருத்தப்படலாம்.??

சிறு மற்றும் அற்பத் தவறுகளுக்காக, அரசு கோயிலைத் தங்கள் வசம் முழுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறுகளைச் சரி செய்ய குறுகிய காலம் அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளலாம்.
வரலாறு:
ஒரு காலத்தில் தில்லை மரங்களடர்ந்த வனம்தான் இந்தச் சிதம்பரம். இப்பொழுது பிட்சாவரத்தில் உள்ளதே அதே மரங்கள்தான். சிற்றம்பலம் என்ற பெயர் மருவி சிதம்பரம் என்றாகி விட்டது. இரணிய வர்மன் எனும் மன்னன் முதல் முதலாய் கோயிலை உருவாக்கியவன், பின்னர் சோழ, பாண்டிய,பல்லவ,விஜய நகர ஆட்சியாளர்களால் விரிவாக்கப்பட்டதுதான் இந்த நடராசர் கோயில்.
பண்டைக்காலச் செப்பேடுகளின் படி இந்த ஆலயமானது கி.பி 1888 முதல் 1963 வரையில் என்றும் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை. புலவர் செ ராசு அவர்களின் கூற்றுப்படி எல்லா ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்தையும் மேற்கொண்டுள்ளனர். அந்த அலுவலர்களில் யாரும் சிவ பிராமணரோ,தீட்சிதர்களோ இல்லை.
பூசை செய்வோர் கோயில் நிர்வாகிகளிடமிருந்து அறக் கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம்,தளிகை, சட்டிச் சோறு,பிரசாதங்கள் போன்றவற்றைப் பெற்றே வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
மாலிக்காபூர் போன்றவர்களின் படையெடுப்பின் போது புளிய மரப் பொந்திலும்,பின் குடுமியான் மலையில் சில காலமும்,அதன்பின் மதுரையிலும் இருந்த நடராசர்,ஒரு வழியாக மராத்தியர் உதவியுடன் ஊர் வந்து சேர்கிறார். அதுவரையில் இந்த நடராசரை ஆராதித்தவர்கள் எந்த மூவாயிரவரோ?அவர்களும் ஒரு வேளை மூவாயிரவர்களின் கிளைகளோ அது அந்த மூவாயிரமானவருக்கே (அட .. அந்த நடராசர்தான்) வெளிச்சம்.
பலரின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயிலானது பிச்சாவரம் ஜமீன் கைகளுக்கு வந்து சேர்கின்றது. கோயிலின் அணிகலன்களும்,சாவியும்,பிச்சாவரம் ஜமீந்தாரர் வசம் இருந்துள்ளன. அர்த்த சாமப் பூசை முடிந்தவுடன் கோயிலைப் பூட்டி சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு சென்று சாவியை ஒப்படைத்துள்ளனர். அதே போல் அதிகாலை சென்று சாவியினை வாங்கி வந்துள்ளனர்.
புராண விளக்கம்,சட்டப்படியான சாட்சியமாகுமா?
மூவாயிரவர் கையிலையிலிருந்து வந்ததாகவும், அவர்களில் ஒருவர் சிவ பெருமான் எனவும் பரமார்த்த குரு கதையாக நமக்குத் திரும்பவும் அறிவுப் பிரச்சாரம் செய்யக் கிளம்பியுள்ளனர். தகுதி திறமையேதுமற்ற நமக்கு அவர்கள் கூறும் புராண விளக்கங்களை ஏற்பது தவிர என்ன பாக்கியமிருக்க முடியும்,அதுவும் நீதி மன்றமே கூறிய பின்னர்.
புராணங்கள்: சிறு விளக்கம்..
செருக்கு தவிர் புராணம்:
மனதில் நினைத்தாலே கற்பு போய்விடும் எனும் ஒரு புராணக் கதை. பிற ஆடவன் வேறு கண்ணோட்டத்தில் கண்டாலே போகும் கற்பென்பது ஓர் புராணம். அடுத்தவன் மனைவியை அடைய நினைத்த ராவணன் அரக்கன். மணமான ராமனை நினைத்த சூர்ப்பனகை ஒரு அரக்கி. இவைகளும் புராணங்கள்தான். ஆனால் அதே புராணங்களில் தெய்வீகம் எப்படியுள்ளதென்றால்..
அழகென்றால் அழகு,அப்படியொரு அழகு. பத்தினிப் பெண்களை அதிலும் ரிஷிகளின் தவ வலிமைக்குக் காரணமான ரிஷி பத்தினிகள் தங்கள் நிலை மறந்து வீதியில் தொடரும் வண்ணமான அழகு அந்தப் பரதேசிக்கு. ரிஷி பத்தினிகள் மேய்ந்த அழகு..மேய்த்த அழகுக்குச் சொந்தக்காரர் ஆடல் வல்லான்.
அந்தப்புறம் பார்த்தோமேயானால் எப்பொழுதும் மோகினி வேடம் தரிக்கும் விஷ்ணு. முக்காலம் உணர்ந்த,தவ ஸ்ரேஷ்டர்களான ரிஷிகள் மதி மயங்கி விரக தாபத்தில் விழுந்து புரள... தாருகா வனத்தின் வயோதிக வாலிப அன்பர் அன்பிகளின் பல்வீனத்தை உணர்த்திய தெய்வீகங்கள்.
புராணங்களில் கூட இந்த ரிஷிகள் தாங்கள் மோகினி பின்னால் சென்று மேய்ந்ததனைப் பற்றி நினைக்காமல் ஆமாம் அது பற்றி அந்த ரிஷி பத்தினிகள்தானே நினைக்க வேண்டும், தங்கள் தர்ம பத்தினிகளை மேய்த்த ஆடல் வல்லானை நோக்கித்தான் பாம்புகளை,மழுவை ஏவினார்கள் அவற்றையெல்லாம் இன்னமும் ஏந்திக் கொண்டுதான் உள்ளார் நடராசர். திரிகால ஞானிகளான ரிஷிகளும் ரிஷி பத்தினிகளுமே இப்படியென்றால் பாவம் இத்தரை மாந்தர்கள் என்பதுதான்,
கலிங்கத்துப் பரணி தொட்டு,சினிமாவுக்குப் போன சித்தாளு கதை வரை தொட்டுத் தொடரும் நிகழ்வு தெரிந்தவர்களுக்கு இவையெல்லாம் புதிதொன்றுமில்லை.
யாகங்கள்
வேதாகம தீட்சை பெற்று வேத முறையினைப் பின்பற்றுவதாகக் கூறும் தீட்சிதர்கள் வேதம் சொல்லும் ஆடு,மாடு,குதிரை ஆகியவற்றினைப் பலி கொடுப்பதில்லையல்லவா?சோம யாகம் செய்யும் தீட்சிதர்கள் பசுக்களைப் பலி கொடுக்க வேண்டியதும் வேதம் சொல்வதுதான். புத்தரின் பின்னேயான இந்த அஹிம்சைத் தத்துவமானது வேதங்களுக்கு அந்நியமானதுதான்.
வேத வழிபாடு என்று கூறித்தான் அன்னைத் தமிழை தீண்டத் தகாத மொழியாக்கி, தீட்டுக் கழிக்கின்றனர். பின் ஏன் இவர்கள் வேதம் கூறும் யாகங்களை செய்வதில்லை.
அஸ்வ மேத யாகம் பற்றிப் படித்தால் இந்த சரக்குகளில் மிச்சம் மீதியென்று ஒன்றும் மிஞ்சாததென்பதால் அது பற்றி அவரவர் தெரிந்து கொள்ளட்டுமென்று விட்டு விடலாம். இந்தக் கோயிலைக் கட்டியவர்கள் யார்?அதன் உண்மையான வரலாறு என்ன?மக்களின் செல்வம்தானே கோயிலின் வருமானம். அதனை மக்களுக்கான அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணியினை கவனிக்க என்ன தடையிருக்க முடியும்.
நாங்கள் இந்துக்களல்ல.. எனும் வாதம்:
நாங்கள் இந்துக்கலள்ள. தில்லைவாழ் அந்தணர் எனும் பிரிவு தனித்துவம் கொண்டது. இப்படியொரு வாதம் இவர்களால் மட்டுமல்ல,ராமகிருஷ்ண மடத்தாலும் கூட தேவைப்படும் பொழுதில் சட்டத்தின் கண்களை மறைக்கக் கூறப்படுவது விந்தையிலும் விந்தையாயுள்ளது. இவர்கள் வணங்கும் கடவுளர்கள் இந்துக் கடவுள்களா அல்லவா என்பதனையும் இவர்கள் கூறினால் இந்துக்கள் என கூறிக்கொள்ளும் மற்றவர்களுக்குத் தெளிவு பிறக்கும் என நமபலாம்.
பெரும்பான்மை இந்துக்களுக்கு..
நந்தனாரைத் தனக்கு அருகில் அழைக்க இயலாத ஆடல் வல்லான்,தனது ந்ந்தியினைச் செல்லமாக்ச் சற்றே விலகியிரும் பிள்ளாய் என்றுதான் கூற இயலுகின்றது. பின்னர் அக்கினிக் குண்ட்த்தில் நுழைந்து (தள்ளி விடப்பட்டு) பொன்னார் மேனியனாய் நடராசருடன் அய்க்கியமான ந்ந்தனார் பற்றி இன்னும் கூட இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள்தான் எழுதலாம். பிறர் எழுதினால் அவர்கள் நாத்திகர்கள் எனும் முத்திரை வந்து வாய்க்கும். சிதம்பரத்தில் இனி காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று கூறி வடலூர் சென்ற வள்ளலார் ஏன் சென்றார் என்பதும் அறிய வேண்டிய வரலாறு. இருண்ட பக்கங்களில் உள்ளவை பெரும்பான்மை இந்துக்கள்  ஏளனப்படுத்தப்பட்ட வ்ரலாறு. சனாதனமா?சன்மார்க்கமா? ஒன்றா.. பலவா.. எது இந்துமதம்?
அரசமைப்புச் சட்டம்:
தேவாரப் பாடலாய் முடங்கிக் கிடக்கின்றது,அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனும் அரசமைப்பின் அடிப்படைக் கடமைகளுக்கான சட்டப் பிரிவு 51 A (h) . எந்த ராச ராச சோழனால் தூசி தட்டப்படுமோ தெரியவில்லை! அப்படியே தூசி தட்டப்பட்டாலும்,அதுவும் சிதம்பரம் நடராசர் கோயில் தமிழாய்த் தீண்டத்தகாத பிரிவாய் வெளிப் பிரகாரத்தில் வீசியெறியப்படுமோ..என்னவோ.. பெரும்பான்மை விழித்தாலொளிய தீர்ப்புகளில் திருத்தமிருக்காது.

குறிப்பு: பிற்படுத்தப்பட்டோரின் குரல் ஜனவரி 2014 இதழில் வெளிவந்தது.