வியாழன், செப்டம்பர் 12, 2013

தேவ பாஷையும்,தேச கலாசாரமும்..

 தேவ பாஷையும்,தேச கலாசாரமும்..


அரசு, ஆன்மீகம், அறிவியல் என்பன எல்லாமே மக்களுக்காக என்பதாகத்தான் நமது சிற்றறிவுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெத்தப் படித்த மேதாவிகள், மேதாவித்தனத்தின் குத்தகைதாரர்கள் அப்படி எண்ணுவதுமில்லை, நம்புவதுமில்லை. அதிலும் இந்த வர்ணாஸ்ரம வாதிகளோ அடிப்படையிலேயே ஜனநாயக மாண்பினை முற்றிலுமாக மறுதலிக்கும் நபர்கள். சமத்துவம் என்ற சொல் அவர்களுக்கு அந்நியமானது. அதனால்தான் கல்வி வெகு ஜன மக்களுக்கு மறுக்கப்பட்டது. தீட்டான மனித சிந்தனையால் தீட்டுப்பட்டார் கடவுளும். “உள்ளே வாரும் பிள்ளாய்... என்று கூற இயலாத கடவுள், நந்தியினைப் பார்த்து “சற்றே விலகியிரும் பிள்ளாய்.. என்றுதானே கூற முடிந்தது. அந்த அளவு பலவீனமானதுதான் இந்தக் கடவுள் தத்துவம்.

இதெல்லாம் கடந்த காலம், இப்பொழுது எல்லாம் சமம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் ஏமாற்றப்படுவதனை அன்னா வந்து நிரூபித்தார். இப்பொழுது ஒரு தேசியக் கட்சியின் தலைவர் தனது திருவாய் மலர்ந்தருளியுள்ள கருத்துக்கள் மீண்டும் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

மக்கள் பேசாத மொழிக்கு வக்காலத்து வாங்கும் வர்ணாசிரமக் காவலர் கலாச்சாரம் சீரழிந்ததற்கு ஆங்கில மோகம் என்று கூறுபவர், ஆங்கிலக் கல்வியின் பலன்களை அனுபவிப்பவர். இன்றைய பிரச்னைகளுக்குக் காரணமாக ஆங்கிலத்தினைக் கூறி மக்களை நூறாண்டுகளின் பின் எடுத்துச் செல்ல எததனிக்கின்றார். அப்பொழுதுதானே அவர்கள் விரும்பும் வர்ணாஸ்ரமம் பாதுகாக்கப்படும். அதுதான் அவரது உள்ளக் கிடக்கை.
மக்களின் துயருக்கான விடையைத் தேடியலைந்த, சிந்தித்த புத்தர் தனது கோட்பாடுகளை விளக்கியது பாலி மொழியில். அதாவது அன்றைய மக்களின் மொழியில்.
தொழில் நுட்பப் புரட்சியால் விளைந்த நன்மை (ஒருவகையில் கேடு எனவும் கூறலாம்) அவரவர் மொழிகளில் தொலைக்காட்சி, 24 மணி நேரமும் தங்கு தடையின்றி. ஒரு காலத்தில் தமிழில் ஒளிபரப்பு நேரம் அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காக தொலைக்காட்சி நிலையத்தின் முன்பாக தொலைக்காட்சிப் பெட்டியினை உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது நினைவு கூரத்தக்கது. ஆனால் இன்று ஹாலிவுட்டில் வெளிவரும் படங்கள் கூட வசூலை மையப்படுத்தி ஓரிரு நாட்களில் நம் தாய் மொழியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மலையிடம் மஹம்மது வராவிட்டால், மஹம்மதுவிடம் மலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே உண்மை. இந்து மதக் காவலராய் இவர்கள் காட்டும் விவேகானந்தரும் கூட அதைத்தானே கூறினார். நமது கல்விக் கூடங்கள், மதிய உணவுத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகச் சிந்தித்த சமத்துவக் கோட்பாட்டில் முழு நம்பிக்கையுடைய தலைவர்களால் விளைந்தவைதானே!
கல்வியை மக்களுக்குத் தரத் தயங்கிய மத அடிப்படைவாதிகள் உயர்த்திப் பிடிக்கும் மொழிக்கு வக்காலத்து வாங்கும் நபர் சாதரணமானவரென்றால் கூட நாம் அமைதியாயிருந்து விடலாம். ஆனால் அவர் ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைவராக இருப்பதானால் இதனை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் திட்டம் என்ன? மீண்டும் சமஸ்கிருதம், வர்ணாஸ்ரம், கல்வி மறுப்பு அல்லது குலத்துக்கான கல்வி என்பதா என்பதையும் அவர் தெளிவு படுத்தி விடலாமே., மொழி நம்மைப் பொறுத்தவரை சிந்தனைகளைக் கொண்டு செல்லும் சாதனம் தவிர அதன் மேன்மையும் தாழ்வும் பயன்படுத்துவோரின் கையிலுள்ளது. வலிந்து திணித்த ஹிந்தியாவது பேச்சு வழக்கில் உள்ள மொழி. ஆனால் இந்த சமஸ்கிருதம்..

தமிழகத்தின் அரசியல் மேதாவியென இவர்கள் உச்சுக் கொட்டும் நபர், ஊடக உலகம் அழுது அடம் பிடிக்கும் சோ ராமசாமி, பத்தாண்டுகளின் முன்பாக பாலியில் கல்வி தேவையா? இல்லையா? என்ற விவாதம் நடந்த பொழுதில் ஆடு மாடுகளெல்லாம் கற்றுக் கொள்கின்றனவா என்ன? என்று வாயாடினார்.
அதற்கு பதிலடியாக மன நல மருத்துவர் ருத்ரன் அவர்கள், ஆடு மாடுகளெல்லாம் பத்திரிக்கை நடத்துவதுமில்லை, படிப்பதுமில்லை என்று சூடு கொடுத்ததும் நடந்த கதைதான்.

ஏன் இந்த மேதாவிகள் தங்களின் பத்திரிக்கையை அந்த தேவ பாஷையில் அச்சடித்து தேவநாதன்களுக்குத் தருவதில்லையென்பது அந்தத் தேவர்களுக்குத்தான் தெரியும்.  
நாங்க ரொம்ப ரொம்ப நல்லவய்ங்க என மூச்சுக்கு மூச்சு கூறிக் கொள்ளும் பத்திரிக்கைக் குழுமம், தனது அனைத்து பத்திக்கைகளுக்கும் தனது லேபிளை ஒட்டி மு.க வீட்டு நாய்க்குட்டி உச்சா போனது என்ன இருந்தாலும் தவறுதான்.. என்று கட்டுரை வெளியிட்டு புல்லரித்துப் போகும் நிலையில் சமீபத்தில் “டைம் பாஸு க்காக ஒரு பத்திரிக்கையை கொண்டு வந்துள்ளது. அதற்கு மட்டும் லேபிள் ஒட்டவில்லை. ஏனென்றால் அது மலிவு விலையில் மனித வக்கிரத்துக்குத் தீனி போட்டு கல்லா கட்ட முடிவு செய்து வெளியிடுவதால்தான்.  
அகில இந்திய அளவிலும் கூட இவர்கள் தங்கள் பத்திரிக்கைகளையும், தங்கள் கூட்டங்களையும் அந்தத் தேவ பாஷையில் நடத்தி ஆட்சிக்கு வரும் கனவுகளைக் காணலாமே. ஓட்டு வாங்க அந்தத் தேவ பாஷை உதவாது என்பதால்தானே, மக்கள் மொழியில் ஏமாற்றி நாமம் போட வருகின்றனர். மக்களாட்சியில் மக்கள் மொழிகளின் மேல் இவர்களுக்கு உள்ள வன்மமும், தேவ பாஷையின் மேலுள்ள காதலும் அவர்களின் அடிப்படை. ஆண்டவனுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும் என்று அடம் பிடிக்கும் சனாதனம் இன்னும் வற்றிப் போய்விடவில்லை. அவதாரங்கள் பல. அதில் இது ஒரு ரகம். அவர்கள் எப்படியாவது வர்ணாஸ்ரமம், சமஸ்கிருதம்,ஆன்மீகம் என்று தங்கள் குறிக்கோளில் தெளிவாயுள்ளனர், விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.



புதன், ஜூலை 24, 2013

உனக்கு 17 எனக்கு 76..

இதயத் திருடி ரூபியும், இத்தாலியின் முன்னாள் பிரதமரும்..


மூன்று முறை இத்தாலியின் பிரதமர். கட்டுமானத் துறை, விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆன அண்ணலும் நோக்கினார்.. அவருக்கு வயது 76, நோக்கப்பட்டவரின் வயதோ 17. இதயத் திருடி ரூபி என்று செல்லமாய் அழைக்கப்படும் அந்தப் பதினேழு வயதுப் பெண்ணும் இத்தாலியின் முன்னாள் பிரதமரான பெர்லுஸ்கோனியின் “பங்கா, பங்கா கொண்டாட்டங்களில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்களுடன் கலந்து கொண்டவர். இந்த பங்கா பங்கா, பற்றியும் இதனை இந்த பெர்லுஸ்கோனிக்கு அறிமுகப்படுத்திய கடாபியின் ஜெங்கா, ஜெங்காவும் அதிபர்களின் வாழ்க்கை பற்றிய அந்தரங்கங்கள்.


இந்த குறைந்த வயதுப் பெண்ணிடம் பணம் கொடுத்து பாலுறவு கொண்டதற்காகவும் ஏழு வருட சிறைத்தண்டனையும், பிரதமர் போன்ற பொதுப் பதவிகள் வகிக்கத் வாழ் நாள் தடையையும் வழங்கியுள்ளது இத்தாலிய நீதிமன்ற மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரி ஏய்ப்புக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்தான் இந்த பெர்லுஸ்கோனி. மேல்முறையீடுகள் முடிவடையப் பல காலங்கள் ஆகலாம் என்பதால் இவரின் சிறைத்தண்டனை உறுதிப்பட இன்னும் பல காலங்கள் ஆகலாம்.   

இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளவர். தொழில் நிறுவன அதிபரானதால் பல வரி ஏய்ப்புகள், மோசடிகள் அதன் தொடர்ச்சியாய் கூடா நட்புகள் என சகல சட்டவிரோத நடவடிக்கைகளின் நாயகன். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கட்டுமானத் தொழிலில் கோடிளைக் குவித்தவர், ஊடகத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது தவறுகளிலிருந்து தப்பிக்க அவர் தேர்ந்தெடுத்த துறைதான் அரசியல். மசாலா படக் கதைகளையே விஞ்சும் இத்தகைய வரலாற்றின் சொந்தக்காரர்தான் மூன்று முறை இத்தாலியின் பிரதமராயிருந்த பெர்லுஸ்கோனி, பிரதமராவது என்ன மிகவும் கடினமான காரியமா என்ன? கையில் தேவையான பொருளும், ஊடகமும் உள்ள பொழுதில் அதென்ன இயலாத காரியமா என்ன? நிரூபித்துக் காட்டியவர்தான் பெர்லுஸ்கோனி.
இன்றைய இத்தாலியின் கடிவாளமும் இவர் கையில்தானுள்ளது. கூட்டணியின் முக்கியக் கூட்டாளியே இவர்தான். நாம் பார்த்துப் புளித்துப் போன தமிழ்ப் படக் கதைகளை நினைவு படுத்தக்கூடியதுதான் பெர்லுஸ்கோனி எனும் இத்தாலியப் பிரதமரின் கதை. வளர்ச்சிகளின் பரிணாமத்தில் பாலுறவு இல்லாமலா. அதுதான் இந்த பங்கா பங்கா கொண்டாட்டங்கள். .

பாலியல் தொழில் புரியும் பெண்களுடனான உறவு, அவர்களை கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, வயது முதிரா இளம் பெண்ணைக் பணம் கொடுத்துப் பாலுறவுக்கு ஆட்படுத்திய குற்றங்கள் மட்டுமா? கூடவே அதிகார துஷ்பிரயோகமும் செய்தவர்தான். ஆட்சியிலிருந்த பொழுதில் இந்த இதயத் திருடி என செல்லமாகக் கூறப்படும் ரூபி எனும் கரீமா எல்-மெஹ்ரூக் ஒரு திருட்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பொழுதில், அவர் எகிப்து ஜனாதிபதி ஹோஷ்னி முபாரக்கின் உறவினர் என்று ஒரு உண்மைக்குப் புறம்பான காரணத்தினைக் கூறி அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பணித்தார்.

விடுதலை செய்யப்பட்ட ரூபி, மினெட்டி எனப்படும் பல் சுகாதார நிபுணரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டார். இந்த மினெட்டி, பெர்லுஸ்கோனியின் பங்கா பங்கா கொண்டாட்டங்களில் ஒரு கன்னியாஸ்த்ரீயாய் வேடமணிந்து ஆடியவர். அதற்காக அதிக சம்பளமுடைய அரசுப் பணியில் அமர்த்தப்பட்டவர். இதே போல் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்ணொருவரிடம், மினெட்டி பெர்லுஸ்கோனியால் தங்களை பாராளுமன்றத்தில் அமர்த்த முடியும் அதாவது அவர்களுக்கான சம்பளத்தினை அரசே வழங்கும் வண்ணம் என்று கூறிய நிகழ்வும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

தொழிலதிபர்கள் அரசியலுக்குள் வருவதும், அரசியல்வாதிகள் தொழிலதிபர்களாவதும் ஜனநாயகத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வாகியுள்ள நிலையில் பெர்லுஸ்கோனி நமது கண்களைத் திறந்துள்ளார். அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலுள்ள அதிகாரிகள், தங்கள் ஓய்வு காலத்தில் அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வதும் ஜன நாயகத்தினை கேலிக் கூத்தாக்குவதுடன் ஒரு விசச் சுழலாய் உருமாற்றியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் காண இயலாத கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் இத்தகைய அரசியலாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் பறி போவதுதான் வேதனை.   

சனி, மார்ச் 30, 2013

A Review on Paradesi - Movie


À羺¢.. ±Ç¢Â ÁÉ¢¾÷¸û ²Á¡üÈôÀð¼/ÀÎõ ¸¨¾..

¦Ã ¸¡ À¡Ä ÓÕ¸ý

±Ç¢Â ÁÉ¢¾÷¸Ç¢ý ¸¨¾, þÂøÀ¡É ¿ÊôÒ ±É ÀÄ º¢ÈôÒ¸¨Çì ¦¸¡ñ¼¦¾¡Õ ¾¢¨ÃôÀ¼Á¡¸ ÅóÐûÇ À羺¢ À¡Ã¡ð¼ôÀ¼ §ÅñÊ ÓÂüº¢¾¡ý. «¦Á¡¢ì¸¡¨Åì ¸¡ôÀ¡üÚÅо¡ý ¿õ ¯Ä¸ ¿¡Âì÷¸Ç¢ý ¯Ä¸ Ţ¡À¡Ã øº¢Âí¸û. þó¾¢Â¡¨Å ´ÕÅ÷ Ìò¾¨¸ìÌ ±ÎòÐì ¦¸¡ñΠŢ𼠦À¡Ø¾¢ø ¾¡Ã¡ÇÁÂÁ¡ì¸Ä¢ý «Îò¾ ¸ð¼õ «¦Á¡¢ì¸ô À¡Ð¸¡ôÒ¾¡§É, «¾¨É ¦ºöÀÅ÷ ¯Ä¸ ¿¡Â¸ý¾¡§É.



±¡¢Ôõ Àɢ측θû ±Ûõ ¿¡ÅÄ¢¨É «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñ¼ À¼õ. ¿õ ¸ñÓý º¢Ä ÀÄ ÅÕ¼í¸Ç¢ý ÓýÀ¡¸ §¾Â¢¨Äò §¾¡ð¼ §Å¨ÄìÌ ¯ÃÁ¡ì¸ôÀð¼ ¾¡úò¾ôÀð¼ ÁÉ¢¾÷¸Ç¢ý ÅÃÄ¡üÈ¢¨Éô À¾¢× ¦ºö¾ À¼Á¡¸×ûÇÐ. ¸í¸¡½¢Â¢ý ¬¨º Å¡÷ò¨¾¸¨Ç ¿õÀ¢ Àïºõ À¢¨Æì¸î ¦ºøÖõ ÁÉ¢¾÷¸Ç¢ý Å¡ú쨸. þýÚ Àïºõ À¢¨Æì¸ Å¢Á¡Éõ ²¡¢î ¦ºøÖõ À羺¢¸Ç¢ý §Å¨Ä¢ø ²§¾Ûõ À¢Ãî¨É¸¦ÇýÈ¡ø «¾¨É ¯¼ÉÊ¡¸ þó¾ «ÃÍõ, ¿¡ý¸¡ÅРཡ¸¢Â °¼¸í¸Ùõ ¸½ì¸¢¦ÄÎòÐì ¸¾È¢ò ¾£÷òРŢðÎò¾¡ý ÁÚ §Å¨Ä À¡÷츢ýÈÉ. «¾üÌ Àì¸Å¡ò¾¢Âí¸Ç¡¸ þý¨È «Å¾¡Ã ÒÕ„÷¸Ç¡¸ ¿ÁÐ «ýÉ¡ †…¡§Ã×õ, «ÃÅ¢óò ¦¸ˆ¡¢Å¡Öõ ¯ûÇÉ÷. 

«ó¾ì ¸¡Äò¾¢ø ¿¼ó¾Ð¾¡§É ±É ±ñ½¢ Å¢¼ þÂÄ¡¾ Ũ¸Â¢ø, þýÚõ ¿¡õ ¸ø ÌÅ¡¡¢¸Ç¢Öõ, ¦ºí¸ø ݨǸǢÖõ ²ý ¾¢Õôâ÷ §À¡ýÈ ¦¾¡Æ¢ø ¦ÀÕò¾ ¿¸Ãí¸Ç¢Öõ ¿¨¼¦ÀÚõ ÁÉ¢¾ ¯¨ÆôÒî ÍÃñ¼ø¸¨ÇÔõ ¿õ ¸ñÓýÉ¡ø À¡÷òÐì ¦¸¡ñÎû§Ç¡õ. «¾¨É ±¾¢÷òÐì ÌÃø ¦¸¡ÎôÀÅ÷¸û «í¦¸¡ýÚõ þí¦¸¡ýÚÁ¡öî º¢¾È¢ì ¸¢¼ìÌõ ºã¸ ¬÷ÅÄ÷¸û¾¡ý. «¦Á¡¢ì¸¡Å¢üÌî ¦ºøÀÅ÷¸¨ÇÔõ þÐ §À¡ýÈ ¯¨ÆôÒî ÍÃñ¼ø¸ÙìÌ ¬Ç¡Ìõ ¿À÷¸Ç¢ý ºã¸, º¡¾£Â ¿¢¨ÄôÀ¡Î¸¨ÇÔõ À¡÷ì¸ò ¾ÅÚõ °¼¸ò ¾ÅÚ¸¨Ç, þÂìÌÉ÷ À¡Ä¡×õ ¦ºö¾¢ÕôÀÐ ´ý¨È ÁðÎõ ÁÈóРŢðÎô À¡÷ò§¾¡§Á¡ɡø, þÐ º¢Èó¾ ¾¢¨ÃôÀ¼õ¾¡ý. ¯½Å¢ø º¢ì¸¢Â ¸ø §À¡ø ¿õ¨Á ¦¿ÕÎÅÐ «ó¾ ´Õ ̨ÈÀ¡Î¾¡ý. À¨¼ôÒî ;ó¾¢Ãõ ±ýÈ¡Öõ ±Ç¢Â Áì¸Ç¢ý ÅÄ¢¨Âô À¾¢× ¦ºöÂô ÒÈôÀÎõ À¨¼ôÀ¡Ç¢ìÌ þó¾ ÅÕ½¡º¢ÃÁî º¢ì¸¨Äô À¾¢Â ÁÉõ Åá¾Ð ÁðÎÁøÄ, Á¾ Á¡üÈõ ±ýÀ¨¾ì ¦¸¡î¨ºÂ¡¸ì ¨¸Â¡ñÊÕôÀÐõ ÅÕó¾ò¾ì¸Ð¾¡ý.

Á¾Á¡üÈò¾¢É¡ø¾¡ý ÀÄ ¾Ä¢òиÙõ, ¸¼§Ä¡Ã Á£ÉÅ ºÓ¾¡Âí¸û ¸øÅ¢ÂÈ¢× ¦ÀüÈÉ÷ ±ýÀÐõ ¯ñ¨Á. ¸øÅ¢ ÁÚò¾ Á¾ì §¸¡ðÀ¡Î¸û þýÛõ þÐ §À¡ýÈ º¢Èó¾ À¨¼ôÀ¡Ç¢¸Ç¡Öõ ܼ ÁÉîÍò¾¢§Â¡Î À¼Á¡ì¸ôÀ¼¡Áø §À¡ÅÐ ¸Å¨ÄÂÇ¢ôÀ¾¡¸§ÅÔûÇÐ.

«Ð ¾Å¢÷òÐô À¡÷ò§¾¡§Á¡ɡø, «ôÀ¡ ÓÃÇ¢ìÌì ¸¢¨¼ì¸¡¾ ¸¨¾ì ¸ÇÛõ, þÂìÌÉÕõ «¾÷Å¡×ìÌ ¸¢¨¼òÐûÇÐ ÁðÎÁøÄ «¾¨É «ÅÕõ º¡¢Â¡¸ô ÀÂýÀÎò¾¢ì ¦¸¡ñÎûÇ¡÷. '¿¢Â¡Á¡ §Ãö', ±É ¾Óì¸ÊìÌõ «¾÷Å¡. ¸ø¡½ò¾¢üÌ ÅÕÀÅ÷¸û Å¡í¸¢Â ¦Á¡öôÀ½ò¨¾ ¨Åì¸ §ÅñÎõ ±Éì ÜÚÅÐ ÀÄ ¸¢Ã¡Áí¸Ç¢ø ¿¼ó¾ ¸¨¾¾¡ý. ¦ºö¡Ţð¼¡ø «¾ý À¢ý ¯È׸¨Ç ÓÈ¢òÐì ¦¸¡ñ¼Å÷¸Ùõ ¯ñÎ. Å¢¨Ç¡ð¼¡öò ¾¢¡¢Ôõ ´ðÎô ¦À¡Ú츢 «¾÷Å¡, ¦À¡Õû òÎõ ÓÂüº¢Â¢ø þÈíÌõ ¦À¡Ø¾¢ø ¸í¸¡½¢Â¢ý ¸ñ½¢ø ÀÎÅÐõ, «¾É¡ø º¡æ÷ ¸¢Ã¡Á Áì¸û §¾Â¢¨Äò §¾¡ð¼ ¦º¡÷츧ġ¸ò¾¢üÌô À½Á¡ÅÐõ ¸¨¾Â¢ý ¾¢ÕôÒ Ó¨É. ¸í¸¡½¢Â¢ý ¦¸¡Þà Ӹõ §¿¡Â¡ø Å¢Øó¾ «ôÀ¡Å¢¨Â Å£¾¢§Â¡Ãõ Å¢ðΠŢðÎî ¦ºøÖõ ¦À¡Ø¾¢ø ¸¡ðº¢ô ÀÎò¾ôÀðÎûÇÐ. «Ê¨Á §Å¨Ä ¦ºöÔõ þ¼í¸û ÁðÎÁøÄ, ¦À¡ÕÇ¡¾¡Ã ÀÄÅ£Éí¸Ç¡ø, þýÛõ ܼ º¡¾£Â ÁÄ¢ÉôÀÎò¾ø¸Ç¡ø ¸ð¼¨Áì¸ôÀðÎûÇ ¿õ ºÓ¾¡Â «ÅÄí¸ÙìÌ ¸Õò¾ì ¸ñ½¢ ÌȢ£¼¡ì¸ôÀðÎûÇ¡÷. ¸üÒ «¾¨Éì ¸¡ì¸ ¬Â¢Ãõ ¸¼×û¸û ±É §À¡Ä¢Â¡öì ¸ð¼¨Áì¸ôÀðÎûÇ ¿õ ºÓ¾¡Âò¾¢ø ¸ðÊ ¸½ÅÉ¢ý ¸ñ Óý§É§Â Á¨ÉÅ¢¨Â Å¢Õó¾¡ì¸¢ì ¦¸¡ûÙõ «ÅÄí¸û º¡¾£Â §¿¡Â¢ý ¯îºõ ±ýÀо¡§É ¯ñ¨Á.   §¿¡öìÌ ÁÕó¾¡, ¸¼×Ç¡ ±ýÀÐ §À¡¸¢È §À¡ì¸¢ø ¦º¡øÄôÀðÎûǾ¡ø ¬ÆÁüÚì ¸¢¼ì¸¢ýÈÐ. §¾Â¢¨Äò §¾¡ð¼í¸Ç¢ý ÀͨÁ¢ý À¢ýÉ¡ø ÀøĢǢìÌõ «ÅÄí¸û þý¦É¡Õ Ó¨È §¾¿£÷ «ÕóÐõ ¦À¡Ø¾¢ø Áɾ¢ø ÅóÐ ¦ºøÅÐ ¿¢îºÂõ.

´Õ ÒÈõ ¸Õò¾ì ¸ýÉ¢ ÁÚÒÈõ ¦ºÅò¾ô ¨ÀÂý ±É þÂìÌÉ÷ ¾ÎÁ¡È¢î ¦ºø¸¢È¡÷. þ¨º §À¡ÐÁ¡É¾¡ÔûÇÐ. þÐ §À¡ýÈ À¼í¸Ùì¸¡É ÅĢ¢¨É ¯½÷òÐÁÇÅ¢ø À¢ñ½É¢ þ¨º þøÄ¡¾Ð ´Õ ÀÄÅ£Éõ. §¾Â¢¨Äò §¾¡ð¼ò¾¢¨É ¦º¡÷ì¸Á¡¸ ±ñ½¢ ÅóÐ ÅÆ¢ ¾ÅȢ ¬Î¸Ç¡öî º¢ì¸¢ò ¾Å¢ìÌõ ±Ç¢Â ÁÉ¢¾÷¸û. µ¿¡ö¸Ç¡ì ¸í¸¡½¢¸û. ¾ôÀ¢§Â¡¼ ÓÂøÀÅ÷¸û ¸¡ø ¿ÃõÒ¸û §º¾ô ÀÎò¾ôÀÎÅÐõ, ¸¡Ä¦ÁøÄ¡õ «Å÷¸û «¾Û¼ý ¾Å¢ôÀÐõ ¦º¡ø¦Ä¡½¡ ÁÉ¢¾ ¬üÈ¡¨Á¸û. «ôÀÉ¢øÄ¡¾ ÌÆó¨¾Ô¼ý ´ðÊì ¦¸¡ûÙõ «¾÷Å¡, Å¡í¸¢Â À½ò¾¢¨Éì ¸¡Ä¦ÁøÄ¡õ «¨¼ì¸ ÓÊ¡Р§À¡ÅÐ §À¡Ä ÀÄ÷ «ó¾ ¿Ã¸ò¾¢¨É Å¢ðÎ ¦ÅÇ¢§ÂÈ ÅÆ¢ ¦¾¡¢Â¡Áø ¾Å¢ôÀÐ ÅÃÄ¡Ú. À¡¨È¢ý §Áø ¿¢ýÚ «¾÷Å¡ ¸¨¾Â¢ý ÓÊÅ¢ø '¿¢Â¡ÂÁ¡..§Ãö', ±ýÚ ¸¾ÚÅÐ ¿õ¨Á §¿¡ì¸¢ ÁðÎÁøÄ, À¨¼ôÀ¡Ç¢Â¡¸¢Â À¡Ä¡¨ÅÔõ À¡÷òÐò¾¡ý. «Îò¾ Ó¨È þýÛõ º¡¢Â¡ö ÅÃÄ¡Ú À¾¢ÂôÀð¼¡ø «Ð¾¡ý ¿¢Â¡ÂÁ¡¸Â¢ÕìÌõ. ¬õ..À¡Ä¡ ¯í¸û ¾¢È¨Á¨Â Ì¨È ÜÈÅ¢ø¨Ä, ÅÃÄ¡Ú þýÛõ ¯ñ¨Á¡ö, º¡¢Â¡öô À¾¢× ¦ºöÂôÀ¼§ÅñÎõ ±ýÀо¡ý ±í¸û §¸¡¡¢ì¨¸.

±Ç¢Â ÁÉ¢¾ Å¡úÅ¢ý ²Á¡üÈí¸¨Ç ÅÄ¢Ô¼ý À¾¢Âò н¢ó¾¨ÁìÌ ±ý À¡Ã¡ðÎì¸û.