சனி, ஏப்ரல் 26, 2014

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!

காங்கிரசின் துணைத் தேர்தல் அறிக்கை வெற்றிக்கான கடைசி முயற்சி. – பா ஜ க  
  •  நம்ம தேர்தல் அறிக்கையை ஆடி ஓடி, பாதி தேர்தல் முடியறப்ப வெளில கொண்டு வரதுக்குள்ளயே உயிர் போயிடுச்சு,
  • -    இவிய்ங்க விட மாட்டாய்ங்க போல !
  • -    அப்பு அடுத்ததுக்கு ஒரு அய்ந்து வருசமாவது வேணும் அப்பு!

என்னைத் தடுக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் – மோடி
  • -    தேர்தல் முடியட்டும், ஜெயிச்சா பா ஜ கா வே அதைத்தான் செய்யும்.
  • -    பிரேக்கில்லாத வண்டியத் தடுக்காதீங்கப்பா? அதுவா நிக்கத்தான போகுது.

பா ஜ க வில் இணைந்தார் மன்மோகன் சிங்கின் சகோதரர்..
  • -   அண்ணன் அவமானப்படுத்தப்பட்டதற்காக என்ற தம்பி சரிதான்.
  • - ஆனால் பா ஜ க வில் சீட்டுக்கு துண்டு போடுவதென்னவோ பங்காளிச் சண்டை மாதிரி உள்ளதே!
  • - அண்ணன் தி மு க .. தம்பி அ தி மு க கதையெல்லாம் எங்களுக்கு ரொம்பவே பழசு.. அங்க இப்பதான் ஆரம்பம் போல.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்து பா ஜ க மௌனம் ஏன்? கபில் சிபல்
  • கள்ள மௌனம்தானே வைகோ-தமிழருவி-சின்ன அய்யா அவர்களே!
  • உங்களுக்கென்ன கூட்டணியில்லாம தனித்து விடப்பட்டதால் தொல்லை இல்ல.
  • எங்க அணியில தமிழருவி மணியன், ம தி மு க, பா ம க எல்லாம் இருக்காங்கள்ள.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது..சரத் குமார்
  • நமக்கு எதுக்குங்கண்ணே தீர்ப்பு அது இதெல்லாம்..
  • நமக்கு வேண்டியது ரெண்டு சீட்டு..
  • ஒண்ணு சித்தப்பாவுக்கு .. இன்னொன்னு பகுத்தறிவுச் சித்திக்கு...
  • ம்மாகிட்ட சொல்லி ரெண்டு சீட்டுக்குத் துண்டு போட்டா எல்லா ஏமாற்றமும் சட்டமன்றத் தேர்தலில் சரியாப் போகும்.

சுவர் விளம்பர பிரச்னை. வீட்டு உரிமையாளருக்கு அடி – மாமல்லபுரம்
  • நாடே எங்களுக்கு உரிமைன்னா வீட்டுச் சுவருக்கு எங்களுக்கு உரிமையில்லையா?
  • என்னடா நடக்குது இங்க !

2016 தேர்தலில் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது..- ஞானதேசிகன்.

  • என்னவொரு நம்பிக்கை..
  • அப்ப, கூட்டணிக் கதவ இப்பவே திறந்துட்டாய்ங்க.

அதானி குழுமத்தின் சொத்து உயர்ந்தது எப்படி? – ராகுல் காந்தி
  • யாரு வளர்ச்சிக்குப் பின்னால் யாரு?  
  • மோடியா...லேடியா...டாடியா?
  • சொல்வீர்களா...நீங்களெல்லாம் சொல்வீர்களா?

நீதித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதாது. - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
  • நிதித்துறையை நீதித்துறை அனுசரித்துப் போகவில்லையோ?